Friday, September 16, 2011

அழகில் அழகு!

காலை கதிரவனின் உற்சாகம்,
நல்லிரவு நிலவின் நிசப்தம்,
சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பு,
இதையெல்லாம் விட அழகு...
வெட்கம் வந்த பொழுதுகளில்உன் இரு கரங்களுக்குள் புதைந்து போகும் உன் முகம்!

Tuesday, May 24, 2011

மா நரகம் (நகரம்):

வழக்கம் போல் அலுவலகம் நோக்கி விரைந்துகொண்டிருந்தனர் மக்கள்!

அவர்களை அளவின்றி அனுமதித்து நிறைந்துகொண்டிருந்தன பேருந்துகள்!!

சாலைகளாக்கப்பட்ட சோலைகளெங்கும் கரு வண்ணம் தீட்டி, புகைந்துகொண்டிருந்தன வாகனங்கள்!!!

இவை எதனிலும் தொடர்பற்றுப் போகாமல் குறைந்துகொண்டிருந்தன எங்கள் ஆயுட்காலங்கள்!!!!

Monday, May 23, 2011

கவிதைக் கிறுக்கல்கள்!

காதல் எனக்குக் கவிதைகளை கடன் தர மறுத்தது!
கிறுக்கல்களை மட்டுமே கடிந்து கொடுத்துச் சென்றது!!
காதலால் தரப்பட்டவைகலானால்.....
கிறுக்கல்களும் கவிதைகள்தாம்! :)

Sunday, May 22, 2011

பிதற்றல் (:P)


உன்னோடு ஊர் சுற்றித் திரிந்ததில்லை,
ஊர் சுற்றும் பொழுதுகளில் உன் பிரிவை உணர்ந்திருக்கிறேன்!

உன் கரம் பற்றிப் பேசியதில்லை,
இன்னொரு நண்பன் உன் கரம் பற்றிப் பேசினால் பொறாமை கொண்டிருக்கிறேன்!!

உன்னோடு யார் பேசினாலும்,
உன்னைப் பற்றி யார் பேசினாலும்,
என் செவிகள் அதை க்ரஹிக்க மறந்ததில்லை!!!

உன் வெட்கத்துகெல்லாம் காரனமாய் இருக்க விரும்பியிருக்கிறேன்,
அதை புறக் கண்ணில் பதிவு செய்து, அகக் கண்ணில் ஆயிரம் முறை பார்த்து ரசிக்கிறேன்!!!!

உன் தோளோடு தோள் உரசிய அந்த ஒற்றை நிமிடம்,
தினம் தினம் நினைத்துப் பூரிக்கிறேன்!!

உன் கனிவான வார்த்தைகளில் களிப்புற்றது மட்டுமில்லை,
நீ உரிமையுடன் உதிர்த்த கோபத்தில் கண்ணீர் கூட சிந்தியிருக்கிறேன்!!

நீ வெட்கித் தலை குனிய, அருகில் நான் அமர்ந்து தூக்கிவிட்ட அந்த ஒற்றைப் பொழுது,
ஏழேழு பிறப்பிற்கும் உயிர் உய்யப் போதும் எனக்கு!!

Saturday, January 29, 2011

சல்யூட்

உள்ளூரில் பல ஆண்டுகளாக படித்துக்கொண்டே திரிந்த நான்,
வெளியூரில் பணி செய்யத் துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டதை,
பளிச்சென்று புரியவைத்தார் எங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டி!

ஒரு நாளும் இல்லா திருநாளாய் என் முன் வந்து எனக்கு ஒரு சல்யூட்!~~
...
நாளை பெங்களூர் திரும்பும்போது அவரை 'கவனிக்க' வேண்டுமோ??!

Saturday, January 22, 2011

காரணம்??!!!

உன்னை ஏன் விரும்பினேன்?
அனுதினம் உன்னை ஏன் நினைத்தேன்?

நினைக்கக் காரணம் இருந்திருந்தால்,
மறக்கக் காரணம் கற்பித்திருப்பேன்!

காரணமே இல்லாத கவிதை அல்லவா, காதல்!

Friday, January 21, 2011

சொல்லாமலே!

என் எண்ணம் உனக்குத் தெரியும்

உனக்குத் தெரியுமென்பது எனக்கும் தெரியும்

உன்னிடம் சொல்லி விடுவேனோ என்று நான் பயந்திருந்தேன்

உன்னிடம் சொல்லுவேன் என்று நீ எதிர்பார்த்திருந்தாயோ?

சொல்லாமலே !!!!!!

தலைப்பிடத் தெரியவில்லை!

இமைகள் மூடாமல்,
இதயம் இரையாமல்,
இதழ்கள் திறவாமல்,
மௌனம் உடையாமல்,
எவரும் அறியாமல்,
பார்வையால் பேசிக்கொள்வோம்,
இல்லை.....பார்வையால் யுத்தம் செய்வோம்!
ஆஹா, அந்த நிமிடங்கள்,
நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழ்கிறதே!!