Sunday, May 13, 2018

என்னவளின் வெட்கம்

கரங்களில் முகம் கவிழ்த்து, வெட்கம் என்கிறாய். விரல்களினூடே விழி காட்டி வெல்கம் என்கிறாய்.

என் காதல்

உன் மீதான என் காதல், வானவில் அல்ல, மழை நின்றதும் கலைந்துவிட! அது வானின் நிறம் போன்றது - எந்நாளும் நிலைத்திருக்கும்!! உன் மீதான என் காதல், கூடல் மயக்கமல்ல, கலவி முடிந்ததும் காணாமல் போக! அது ஊடல் உற்சாகம், உறங்கவிடாது உயிர்த்திருக்கும்!! உன் மீதான என் காதல், தாயின் பாசமல்ல சொல்லிச் சொல்லி சோர்ந்து போக! அது சேயின் நேசம், சொல்லாவிடினும் சிறந்திருக்கும்!!